காஷ்மீரில் பலத்த மழை எதிரொலி: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


காஷ்மீரில் பலத்த மழை எதிரொலி: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 1 July 2018 11:05 AM IST (Updated: 1 July 2018 11:05 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர்,

காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன், பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஜீலம் உள்ளிட்ட நதிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. எனவே கரையோர மக்களை தங்கவைப்பதற்காக ஸ்ரீநகர் மற்றும் பாம்போரில் 14 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

காஷ்மீரில் தற்போது கவர்னர் ஆட்சி அமலில் உள்ளதால், வெள்ள பாதிப்புக்கள் குறித்து கவர்னர் ஆய்வு செய்து வருகிறார். தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் காஷ்மீரில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் யாத்ரீகர்கள் வேறு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story