நீட் தேர்வில் கல்பனா குமாரி 691 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம்
![நீட் தேர்வில் கல்பனா குமாரி 691 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம் நீட் தேர்வில் கல்பனா குமாரி 691 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம்](https://img.dailythanthi.com/Articles/2018/Jun/201806041418567049_Kalpana-Kumari-topped-the-NEET-Exam_SECVPF.gif)
நீட் தேர்வில் கல்பனா குமாரி 691 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பெற்பெறுள்ளார். #NEET
புதுடெல்லி,
மே 6-ல் நடந்த இந்த நீட் தோ்வு நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.
இந்தநிலையில் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் சிபிஎஸ்இ வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 691 மதிப்பெண் முதல் மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.சி பிரிவுக்கு 119, ஓபிசி, எஸ்சி.எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான மாணவ சேர்கைக்கான விண்ணப்ப தேதி தொடர்பான அறிவிப்புகள் நாளை வெளியாகும் எனவும், இம்மாத 4வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story