ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக இணையதளம் ஹேக் செய்யப்பட்டது


ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக  இணையதளம் ஹேக் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 22 May 2018 5:15 AM (Updated: 22 May 2018 5:15 AM)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ளா ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

புதுடெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்  விஷமிகளால் செவ்வாயன்று  நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டது.

அந்த இணையத்தளத்தில்  பிறந்த நாள் வாழ்த்து கூறபட்டு உள்ளது. அதுவும் காதலிக்கு காதலன் கூறி உள்ளார். "பிறந்த நாள் வாழ்த்துகள்  பூஜா  உன் காதலன் ." என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது வரை இதற்கு ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது குழுவோ பொறுப்பு ஏற்கவில்லை.   பல்கலைக்கழக அதிகாரிகள் இதுவரை ஹேக்கிங் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story