அசாமில் காவல் நிலையம் அருகே கிடந்த ஐ.எஸ். கொடி
அசாம் மாநிலம் கோல்பாரா நகர புறக்காவல் நிலையத்தின் அருகே ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கொடி ஒன்று கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ISflagAssam
திஸ்பூர்,
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள கோல்பாரா நகர புறக்காவல் நிலையத்தின் அருகே ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கருப்பு நிற கொடி ஒன்று கிடந்துள்ளது.
மேலும் அந்த கொடியில் ஐ.எஸ். மற்றும் என்.இ. (வடகிழக்கு மாநிலம்) என எழுதப்பட்டிருந்தது. கொடியைக் கைப்பற்றிய போலீசார், தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கொடி இப்பகுதியில் எவ்வாறு வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காவல் நிலையத்தின் அருகிலேயே ஐ.எஸ். பயங்கரவாத கொடி கிடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story