காஷ்மீரில் தீவிரவாதிகளால் மேலும் ஒருவர் கடத்தல்
காஷ்மீரின் பன்டிபோரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு பேரை கடத்திச் சென்றுள்ளனர். #BandiporaAbduct
ஸ்ரீநகர்,
வடக்கு காஷ்மீரின் பன்டிபோரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் முகமது சுபன் பாட் என்னும் இளைஞரை கடத்திச் சென்றுள்ளனர். மேலும் அவரது தந்தையை தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து அங்குள்ள செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”பன்டிபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் அப்துல் காஃப்ர் பாட் என்பவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அப்துல் காஃப்ரின் மகனான முகமது சுபன் பாட் என்னும் இளைஞரை கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அப்துல் காஃப்ர் பாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்” எனக் கூறினார்.
கடந்த 48 மணி நேரத்தில் பன்டிபோரா பகுதியில் தீவிரவாதிகள் இரண்டு பேரை கடத்திச் சென்றுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக முன்டாசிர் அகமத் பார்ரே என்பவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story