புதிய அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் தீவிரம்
காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்குவது பற்றி தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
ஐதராபாத்,
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணி ஒன்றை உருவாக்க தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
அவரது இந்த முயற்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், ஐதராபாத் எம்.பி.யும், அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவருமான ஒவைசி மற்றும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, உற்சாகம் அடைந்துள்ள சந்திரசேகர ராவ், புதிய அணியை தொடங்குவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து அவரது அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.
தேசிய அளவில் கண்ணியமான, ஆக்கபூர்வமான அரசியலை உருவாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் பல்வேறு தரப்பினரும் பங்குகொள்ள வேண்டும் என்று சந்திரசேகர ராவ் விரும்புகிறார்.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். (வெளியுறவுத்துறை) மற்றும் ஐ.ஆர்.எஸ். (வருவாய்த்துறை) அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார். அரசின் நிர்வாகத்தில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றி அவர்கள் பெற்ற ஏராளமான அனுபவங்கள் மற்றும் அவர்களுடைய கருத்துகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று சந்திரசேகர ராவ் கருதுகிறார்.
பொருளாதார நிபுணர்கள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், சட்டநிபுணர்கள், மத்திய அரசின் நிதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அகில இந்திய விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிற்சங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டங்கள் ஐதராபாத்திலும், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story