மேகாலயா சட்டசபை தேர்தல்: 45 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக


மேகாலயா சட்டசபை தேர்தல்: 45 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக
x
தினத்தந்தி 2 Feb 2018 10:21 AM GMT (Updated: 2 Feb 2018 11:31 AM GMT)

மேகாலயாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முதற்கட்டமாக 45 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. #BJP #Meghalaya #Assemblypolls

புதுடெல்லி,

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  திரிபுராவில் வரும் 18-ம் தேதியும், மேகலாயா மற்றும் நாகலாந்தில்  வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.   திரிபுராவில் ஏற்கனவே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விட்டது. மேகாலயா, நாகலாந்தில் நேற்று மனுத்தாக்கல் தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 3ம் தேதி நடக்கிறது.

இந்தநிலையில் மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான 45 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மீதி உள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அம்மாநில பாஜக தலைவர் ஷிபுன் லிங்டோ தெரிவித்துள்ளார்.

மேகலாயாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில்  57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story