2ஜி வழக்கு தீர்ப்பு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார், ‘உண்மை வென்றது என்றார்’ - கனிமொழி


2ஜி வழக்கு தீர்ப்பு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார், ‘உண்மை வென்றது என்றார்’ - கனிமொழி
x
தினத்தந்தி 21 Dec 2017 5:13 PM IST (Updated: 21 Dec 2017 5:13 PM IST)
t-max-icont-min-icon

2ஜி வழக்கு தீர்ப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார், ‘உண்மை வென்றது என்றார்’ என கனிமொழி கூறி உள்ளார்.


புதுடெல்லி,


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது. வழக்கில் நியாயமான சந்தேகங்களை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது, எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என நீதிமன்றம் கூறியது. இதற்கிடையே வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தெரிவித்தது.

விடுவிக்கப்பட்டதை அடுத்து திமுக எம்.பி. கனிமொழி செய்தி மீடியாக்களிடம் பேசுகையில், கடந்த ஆறு வருடங்களாக நான் இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருந்தேன் என்றார். பொய்யாக இந்த வழக்கில் இழுக்கப்பட்டேன் எனவும் குறிப்பிட்டார். 

“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னிடம் பேசினார். வாழ்த்து தெரிவித்தார். இது நமக்கு மிகப்பெரிய நாள், உண்மை வென்றது என்றார்.” என குறிப்பிட்டார் கனிமொழி எம்.பி.. 

Next Story