மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ 4.50 பைசா ஆக உயர்த்தி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ 4.50 ஆக உயர்ந்து ரூ.495.65 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 742 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.93 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் 18.11 கோடி பேர் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2,66 கோடி பேர் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story