டெல்லியில் தமிழக விவசாயிகள் தூய்மை போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
அந்தவகையில் விவசாயிகள் நேற்று காலை பிரதமரை சந்தித்து பேச புறப்பட்டனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து ஜந்தர் மந்தருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் விவசாயிகள், ஜந்தர் மந்தர் சாலையை தூய்மைப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘சுதந்திர தினத்தன்று எங்களை சுதந்திரம் அனுபவிக்க முடியாமல் கைது செய்து அடைத்து வைத்தனர். அதேபோல் தற்போது பிரதமரை பார்க்க அனுமதி மறுத்துவிட்டனர். சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்கு சுதந்திரம் இல்லை. துப்புரவு தொழிலாளர்களை போல எங்களையும் மத்திய அரசு பார்க்கிறது. இதனால் தெருவை சுத்தப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம்’ என்றார்.
Related Tags :
Next Story