திரிபுராவில் வெள்ளம்: 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு

திரிபுராவில் தொடர்ந்து பெய்து வரும் கனம் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அகர்தலா,
மேற்கு திரிபுராவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சதுர், ஜிரனியா மற்றும் மோகன்புர் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமித்துள்ளது. ஹவுரா,கோவாய் ஆகிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள நேற்று இரவு முதல்-மந்திரி மாணிக் சர்கார் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story