ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஆகிறார், மீரா குமார்?


ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஆகிறார், மீரா குமார்?
x
தினத்தந்தி 20 Jun 2017 5:30 AM IST (Updated: 20 Jun 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ஒருமித்த கருத்து ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி இருப்பதாக பா.ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ஆனால், இது தன்னிச்சையான முடிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story