காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாபா சித்திக்கின் நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை


காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாபா சித்திக்கின் நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை
x
தினத்தந்தி 31 May 2017 3:44 PM IST (Updated: 31 May 2017 3:44 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பாபா சித்திக்கிடம் அமலாக்க துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பாபா சித்திக்கின் நிறுவனங்களில் அமலாக்க துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் பந்த்ரா புறநகரில் உள்ள குடிசை பகுதிகளை மறுசீரமைக்கும் பணி நடந்து வருகிறது.  அதற்கான பணிகளை மேற்கொண்ட சித்திக் மற்றும் சிலர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உள்ளூர் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் மீது பணமுறைகேடு தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்க துறையினர் குற்ற வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சித்திக்கின் நிறுவனங்கள் உள்பட குறைந்தது 6க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சட்டவிரோத பணமுறைகேடுகளில் ஈடுபடுவதற்காக துணை நிறுவனங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்ததனை அடுத்து கூடுதல் சான்றுகளை சேகரிப்பதற்காகவும் இந்த சோதனை நடந்துள்ளது என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

Next Story