கொல்கத்தாவில் கார் விபத்தில் நடிகை சோனிகா பலி நடிகர் படுகாயம்


கொல்கத்தாவில் கார் விபத்தில் நடிகை சோனிகா பலி நடிகர் படுகாயம்
x
தினத்தந்தி 29 April 2017 11:03 PM (Updated: 29 April 2017 11:03 PM)
t-max-icont-min-icon

பிரபல வங்காள நடிகை சோனிகா சிங் சவுகான் சென்ற கார் தறிகெட்டு ஓடி, சாலை தடுப்பின்மீது மோதி கவிழ்ந்தது.

கொல்கத்தா,

பிரபல வங்காள நடிகை சோனிகா சிங் சவுகான் (வயது 28). இவர் படங்களில் நடித்து வந்ததுடன், மும்பையில் மாடல் அழகியாகவும் திகழ்ந்தார். முன்னணி தனியார் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இவர் கொல்கத்தா நகரின் தென்பகுதியில் சக வங்காள நடிகரான விக்ரம் சாட்டர்ஜியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை விக்ரம் சாட்டர்ஜி ஓட்டிச்சென்றார். லேக்மால் என்ற இடத்தில் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, சாலை தடுப்பின்மீது மோதி கவிழ்ந்தது. அதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டனர். ஆனால் மோனிகா சிங் சவுகானை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விக்ரம் சாட்டர்ஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்துகின்றனர். 

Next Story