பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்
நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுபினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2014ம் ஆண்டு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் கங்கை அமரனோடு, காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்தார். 2016ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட வாய்ப்பு கேட்டு, காயத்ரி ரகுராம், விண்ணப்பமும் செய்திருந்தார்.
இந்நிலையில், பாஜக வின் தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சிப் பணிகளில் ஈடுபடும் ஆர்வத்தைப் பாராட்டி, அவரை அங்கீகரிக்கும் வகையில், இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை காயத்ரி ரகுராம் டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்காள் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story