தை மாத பவுர்ணமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் 20 லட்சம்பேர் புனித நீராடினர்


தை மாத பவுர்ணமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் 20 லட்சம்பேர் புனித நீராடினர்
x

திரிவேணி சங்கமத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) கடந்த ஒரு மாதமாக மகா மேளா நடந்து வருகிறது. நேற்று தை மாத பவுர்ணமி என்பதால், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலுக்குள் சுமார் 20 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மகா சிவராத்தியை முன்னிட்டு, இம்மாதம் 18-ந் தேதி புனித நீராடலுடன் மகா மேளா முடிவடைகிறது.


Next Story