உத்தரபிரதேசம்: ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பேர் பலி


உத்தரபிரதேசம்: ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Dec 2022 4:03 PM IST (Updated: 30 Dec 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் அதிர்ந்து விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, உடனடியாக உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முகல்சராய் எம்எல்ஏ ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இந்நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், வெடி விபத்தில் இறந்த இரண்டு பேரின் சடலங்கள் சாலையில் கிடப்பது போன்றும், மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் லாரி ஒன்று நின்றிருந்ததும் தெரியவந்தது. இந்த லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்தபோதுதான் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.


Next Story