டேட்டிங் செயலியில் பெண் போல் பேசி வாலிபர்களை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது


டேட்டிங் செயலியில் பெண் போல் பேசி வாலிபர்களை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது
x

டேட்டிங் செயலி மூலம் பெண் போல் பேசி அழைத்து, வாலிபர்களை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் பெண்களை தேடினார். அப்போது அவருக்கு இளம்பெண் ஒருவர் செயலி மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பி பழகினர். பின்னர் சம்பவத்தன்று இளம்பெண், நிறுவன ஊழியரை தான் கூறும் இடத்திற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்தார். அதை நம்பிய ஊழியர் பெண் கூறி இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு ஆட்டோவில் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் அவரை கடத்தி சென்றது. மேலும் இரவு முழுவதும் அவரை அடைத்து வைத்து மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்து நகை, பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அவரை விடுவித்தனர். இதையடுத்து அவர் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நதீம் பாஷா மற்றும் நாகேஷ் ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் தான் ஆன்லைன் டேட்டிங் செயலியில் போலி கணக்குகளை தொடங்கியதும், அதில் முகம் தெரியாத பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி 15-க்கும் வாலிபர்களை வலையில் சிக்க வைத்ததும் தெரிந்தது.


Next Story