பீகாரில் 1800 சுகாதார மையங்கள் மூடப்படும்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்!


பீகாரில் 1800 சுகாதார மையங்கள் மூடப்படும்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்!
x

மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்களை மூட பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்களை மூட அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அசோக் குமார் கோஷ் கூறியதாவது:- விதிகளை பின்பற்றி மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 1800 சுகாதார மையங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மையங்கள் அகற்றுவதற்கு அமைக்கப்பட்ட விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீண்டும் பின்பற்றாதபட்சத்தில் சுகாதார மையங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மேலும் இந்த சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும். இதுகுறித்து பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story