அரியானா வன்முறை; 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு
அரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சிலர் கல் வீசி தாக்கினர். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நூ மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் பரவிய வன்முறையில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story