மங்களூரு விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்


மங்களூரு விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.14½ லட்சம் தங்க துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மங்களூரு-

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.14½ லட்சம் தங்க துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ரூ.14½ லட்சம் தங்க துகள்கள்

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பயணியின் உடைமையில் 4 பெட்டிகள் இருந்தது. அந்த பெட்டி கார்பன் பேப்பர்களால் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் தங்க துகள்கள் இருந்தது. அதாவது தங்கத்தை துகள்களாக மாற்றி பெட்டியில் மறைத்து கார்பன் பேப்பர்களால் சுற்றி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பயணியிடம் இருந்து ரூ.14.50 லட்சம் மதிப்பிலான 242 கிராம் தங்க துகள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பயணியை பஜ்பே போலீசாரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story