காஷ்மீர்: ஆய்வின்போது பணியில் இல்லாத 14 அரசு ஊழியர்கள் அதிரடி பணியிடை நீக்கம்
காஷ்மீரில் திடீர் ஆய்வின்போது பணியில் இல்லாத 14 அரசு ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஜம்மு,
காஷ்மீரில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பலர் சரிவர பணிக்கு வருவதில்லை என்ற புகார் எழுந்தது.
அதையடுத்து, பூஞ்ச் மாவட்ட துணை கமிஷனர் இந்தர்ஜீத், கூடுதல் துணை கமிஷனர் தாகிர் முஸ்தபா மாலிக் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவினர், பூஞ்ச் மாவட்ட அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது முறையான விடுப்புக் கடிதம் இன்றி ஊழியர்கள், அதிகாரிகள் பலர் பணிக்கு வராதது தெரியவந்தது.
அதையடுத்து அதிகாரிகள் உள்பட 14 அரசு ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story