11.48 கோடி பான் காா்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்


11.48 கோடி பான் காா்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்
x

பான்-ஆதார் இணைப்பு தொடர்பான கேள்விக்கு நிதித்துறை இணைமந்திரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி ,

வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என முக்கிய அனைத்து தேவைகளுக்கும் பான் கார்டு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது.

ஒரு நபரே பல்வேறு பான் காா்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் பான் காா்டை ஆதாருடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

இந்நிலையில், மக்களவையில் பான்-ஆதார் இணைப்பு தொடர்பான கேள்விக்கு நிதித்துறை இணைமந்திரி பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அவர் அதில் கூறியதாவது:

2023 ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு பான்-ஆதாா் இணைப்பவா்களுக்கு தாமதக் கட்டணம் ரூ.1,000 விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த வகையில், 2023 ஜூலை 1 முதல் 2024 ஜனவரி 31 வரை ரூ.601.97 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 11.48 கோடி பான் காா்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன என்று கூறியுள்ளாா்.


Next Story