10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Sept 2022 7:00 PM (Updated: 29 Sept 2022 7:01 PM)
t-max-icont-min-icon

உல்லால் அருகே, 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு;


பெங்களூரு உல்லால் உபநகரில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகன் ஸ்ரேயாஸ்(வயது 16). இவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரேயாஸ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவனது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பள்ளியில் நடந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனம் உடைந்து காணப்பட்ட ஸ்ரேயாஸ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story