மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்பு: பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது - மம்தாபானர்ஜி கண்டனம்


மஹுவா மொய்த்ராவின் எம்.பி  பதவி பறிப்பு: பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது -  மம்தாபானர்ஜி கண்டனம்
x
தினத்தந்தி 8 Dec 2023 6:20 PM IST (Updated: 8 Dec 2023 6:32 PM IST)
t-max-icont-min-icon

மஹுவா மொய்த்ரா ஒரு பெரிய ஆணையுடன் நாடாளுமன்றத்திற்கு திரும்புவார்.

கொல்கத்தா,

மக்களவையில் பேச லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி கூறியதாவது:- திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா வெளியேற்றியது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நடந்த துரோகம்.

மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்ட விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கட்சி அவருடன் நிற்கிறது. பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அவர்களால் எங்களை தோற்கடிக்க முடியாது. இது ஒரு சோகமான நாள். மொய்த்ரா தனது நிலைப்பாட்டை விளக்கக்கூட பாஜக அனுமதிக்கவில்லை.

மொய்த்ரா ஒரு பெரிய ஆணையுடன் நாடாளுமன்றத்திற்கு திரும்புவார். தங்களுக்கு பெரிதளவில் பெரும்பான்மை இருப்பதால் கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பாஜக நினைக்கிறது. அவர்கள் ஆட்சியில் இல்லாத ஒரு நாள் வரக்கூடும் என்பதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். பாஜகவின் இதுபோன்ற செயல் மன வருத்தம் அளிக்கிறது. பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story