ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது


ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது
x
தினத்தந்தி 5 Aug 2021 8:58 AM IST (Updated: 5 Aug 2021 12:45 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதிய இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. 

இந்தநிலையில்  வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் இறுதிவரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா. 

41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆண்கள் ஆக்கி அணி. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story