தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக 5 மணி நேரம் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக  5 மணி நேரம் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 18 May 2022 8:32 PM IST (Updated: 18 May 2022 8:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக 5 மணி நேரம் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக 5 மணி நேரம் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆய்வு
தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் மீன்வளத்துறை வளாகம் அமைந்து உள்ளது. இங்கு இணை இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகங்கள் அமைந்து உள்ளன. இங்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். பின்னர் அலுவலகத்தில் மீன்வளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். என்னென்ன திட்டங்கள் நடந்து வருகின்றன, பணிகளின் முன்னேற்ற நிலை குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கூடுதல் நேரம்
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் காலை 5 மணிக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்குள் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து விட வேண்டும். இந்த காலஅவகாசம் போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் தூத்துக்குடிவிசைப்படகு மீனவர்கள் கூடுதலாக 5 மணி நேரம் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று மானிய விலையில் படகுகளுக்கு டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அதிகரித்து தர வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஆய்வு செய்து உரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறினார்.


Next Story