கர்நாடகத்தில் தினமும் 5 அடையாளம் தெரியாத உடல்கள் மீட்பு
கர்நாடகத்தில் தினமும் 5 அடையாளம் தெரியாத உடல்கள் மீட்கப்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநில போலீஸ்துறை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தில் மீட்கப்படும் அடையாளம் தெரியாத உடல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் குறித்து போலீஸ்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் மார்ச் வரை 3 மாதங்களில் 527 அடையாளம் தெரியாத உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. அதில் பெங்களூருவில் 114 உடல்கள் மீட்க்பட்டு இருக்கிறது. இதில் 49 உடல்கள் பெண்கள் உடல்கள் ஆகும். கர்நாடகத்தில் தினமும் 5 அடையாளம் தெரியாத உடல்கள் மீட்கப்படுகின்றன. அதில் பெங்களூருவில் தினமும் ஒரு அடையாளம் தெரியாத உடல் மீட்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் கூறும்போது, ‘பெரும்பாலான வழக்குகளில் இறந்தவர்களின் உடல்கள் காணாமல் போனதாக தேடப்பட்ட நபர்கள் என்பது தெரியவருகிறது. 10 முதல் 15 சதவீத உடல்களை தான் அடையாளம் காண முடியாமல் போகிறது’ என்றார்.
Related Tags :
Next Story