கூடலூரில் தொடர் மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறிய கோடை விழா மைதானம்
கூடலூரில் தொடர் மழை காரணமாக கோடை விழா மைதானம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கூடலூர்
கூடலூரில் தொடர் மழை காரணமாக கோடை விழா மைதானம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
பரவலாக மழை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கியது. இதற்காக தனியார் பள்ளிக்கூட மைதானத்தில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கூடலூர் பகுதியில் மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் மழையுடன் காற்றும் வீசியது. இதனால் மேல் கூடலூர், ஹெல்த்கேம்ப் உள்பட பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது.
சேறும், சகதியுமாக மாறியது
இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று காலை முதல் மாலை வரை கடும் மேகமூட்டம் காணப்பட்டது.
இதனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து எந்த நேரத்திலும் மழை பெய்யும் நிலை காணப்பட்டது. இதற்கிடையில் கோடை விழா நடைபெறும் மைதானமும் தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறியது.
அவதி
இதனால் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழாவை கண்டு ரசிக்க வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ேமலும் நகராட்சி ஊழியர்கள் சேற்றை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூர் பகுதியில் எந்த நேரத்திலும் மழை பெய்யும். கடந்த காலங்களில் கோடை விழா நாட்களில் மழை பெய்தாலும் சேரும் சகதி ஏற்படுவதில்லை. ஆனால் தற்போது விழா நடைபெறும் இடத்தை மாற்றியதால் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. மழையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story