வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அமுல்கந்தசாமி எம்எல்ஏ திடீரென ஆய்வு செய்து உள்நோயாளிகள் பணியாளர்களிடம் குறை கேட்டார்


வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அமுல்கந்தசாமி எம்எல்ஏ திடீரென ஆய்வு செய்து உள்நோயாளிகள் பணியாளர்களிடம் குறை கேட்டார்
x
தினத்தந்தி 14 May 2022 9:00 PM IST (Updated: 14 May 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அமுல்கந்தசாமி எம்எல்ஏ திடீரென ஆய்வு செய்து உள்நோயாளிகள் பணியாளர்களிடம் குறை கேட்டார்


வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. திடீரென ஆய்வு செய்து உள்நோயாளிகள், பணியாளர்களிடம் குறை கேட்டார்.

அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. ஆய்வு

 வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வால்பாறை வந்தார். அவர், திடீரென்று வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு  செய்தார். 

அப்போது அவர், டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும். இனிமேல் புகார் வராமல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து  ஆஸ்பத்திரி பணியாளர்களிடம் குறைகளை கேட்ட அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ.விடம், ஆஸ்பத்திரியில் குடிதண்ணீர் இல்லை. இங்குள்ள பணியாளர்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றுகிறார்கள். 

பாதுகாப்பற்ற நிலை

22 பேர் பணியாற்ற வேண்டிய நிலையில் 6 பேர் மட்டுமே பணி புரிந்து வருகிறோம். தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆஸ்பத்திரிக்கு இரவுக் காவலர்கள் கிடையாது. 

நோயா ளிகளின் உதவியாளர்கள் சிலர் குடிபோதையில் வந்து தகராறு செய்வதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றனர்.

இங்குள்ள பணியாளர்களை வேறு இடத்திற்கு மாற்றாமல் இருக்க வேண்டும். புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கூறினார். 

ஆஸ்பத்திரிக்கு குடிதண்ணீர் கிடைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.எ. அறிவுறுத்தினார்.

வீட்டுமனைப்பட்டா

இதைத்தொடர்ந்து அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த தினக் கூலி ரூ425.40 க்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியிடப்ப டும். 

வால்பாறையில் சோலையார் அணை பகுதி உள்பட பல் வேறு இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கையகப்ப டுத்தி ஓய்வு பெறும் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளேன்.

வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாக புகார் வந்தது. அது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி டம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளேன். 

சோலையார் நகரில் 425 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பக்தர்கள் தங்கும் விடுதி

படகுஇல்லம், தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்கப்படும். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கவும், கோவில் வளாகத்தை பராமரிக்கவும், வால்பாறை அண்ணாதிடல் பகுதியில் வாகன நிறுத்தும் வசதியு டன் வணிகவளாகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சம்பள உயர்வு

நகராட்சி வாடகை கடையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பாரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன். 

டேன்டீ தொழிலா ளர்களின் சம்பள உயர்வு குறித்தும் ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களும் கிடைப்பதற்கும் வனத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 எம்.எல்.ஏ. அலுவலகம் அமைக்கும் வரை வால்பாறையில் வாடகை கட்டிடத்தில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறக்கப்படும்.

இவ்வாறு அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story