பாமக கொடியேற்று விழா


பாமக கொடியேற்று விழா
x
தினத்தந்தி 8 May 2022 9:37 PM IST (Updated: 8 May 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பாமக கொடியேற்று விழா

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட ஈசான்ய மைதானம் அருகில் நகர பா.ம.க. சார்பில் கொடியேற்றுவிழா இன்று நடைபெற்றது. 

நகர செயலாளர் (வடக்கு) பத்மநாபநாயுடு தலைமை தாங்கினார். நகர தலைவர் (தெற்கு) குட்டி ரவி முன்னிலை வகித்தார். நகர தலைவர் (வடக்கு) சந்தோஷ் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் பா.ம.க. கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். 

பின்னர் அவர் பேசுகையில், திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் பா.ம.க. கொடியேற்றப்படும். கட்சி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். வருகிற 2026-ல் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை முதல்- அமைச்சராக்க அனைவரும் கட்சி வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் என்றார். 

விழாவில் முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர்கள் இரா.காளிதாஸ், அ.வே.பிரசாத், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சி.எம்.பழனி, பி.கே.எஸ்.செந்தில்குமார், முன்னாள் மாவட்ட பொருளாளர் சௌ.வீரம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் (தெற்கு) உதயராகவன் நன்றி கூறினார்.


Next Story