மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2022 11:56 PM IST (Updated: 6 May 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூடலூர்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு மாற்றிடம் வழங்கக்கோரி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு செயலாளர் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் வாசு பேசினார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதேபோன்று ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


Next Story