எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் உண்டியல் காணிக்கை

எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 6 May 2022 5:05 PM (Updated: 6 May 2022 5:05 PM)
t-max-icont-min-icon

எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் உண்டியல் காணிக்கை

மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர் மற்றும் தக்கார் பழனிவேல் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 49 பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story