பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய கும்பல்; விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு
மைசூரு அருகே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய கும்பல் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு: மைசூரு அருகே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய கும்பல் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார்.
மினி பாகிஸ்தான்
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் கடந்த 3-ந் தேதி இரவு ஒரு கும்பல் சாலையில் நடந்து வந்தது. அப்போது அந்த கும்பலினர் சாலையில் நின்று கொண்டு ‘நரா இ தக்பீர் அல்லாகூ அக்பர்’ என்று கோஷம் எழுப்பினர். பின்னர் ‘எக் பி பாகிஸ்தான் கேயின் சோட்டா, கவலண்டே போல் தோ சோட்டா பாகிஸ்தான்’ (இது மினி பாகிஸ்தான்) என்றும் உரக்க கோஷம் எழுப்பினர்.
இதனை ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. கர்நாடகத்தை மினி பாகிஸ்தான் என்று கோஷம் எழுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மைசூருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலர் கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இதுகுறித்து மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பேசி உள்ளேன். வீடியோ குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
Related Tags :
Next Story