ஆத்தூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிழா:பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
ஆத்தூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதமான அலகு, கத்தி அலகு, நாக்கு அலகு ஆகியவற்றை குத்தி ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் ஆத்தூர், விநாயகபுரம், உடையார்பாளையம், ெரயிலடி தெரு, காந்தி நகர் வழியாக கோவிலை சென்றடைந்தனர். இதையொட்டி வாண வேடிக்கையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story