கிராம சபை கூட்டம்
திருமால்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த திருமால்பூர் ஊராட்சியில், மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் துலுக்காணம் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி, கூடுதல் இயக்குனர் ரேணுகாதேவி, நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, ஒன்றியக் குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2021 - 2022-ம் நிதியாண்டில் நடைபெற்ற வரவு செலவு, ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story