தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 எந்திரங்களில் மின் உற்பத்தி
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 எந்திரங்களில் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நேற்று காலையில் 1-வது மின்உற்பத்தி எந்திரம் மட்டும் இயங்கி வந்தது. மதியத்துக்கு பிறகு படிப்படியாக மற்ற மின் உற்பத்தி எந்திரங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 3-வது மின்உற்பத்தி எந்திரத்தை தவிர மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களிலும் மின்சார உற்பத்தி நடந்தது. இரவு 7 மணி அளவில் 696 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இதுகுறித்து அனல்மின் நிலைய தலைமை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் போதுமான நிலக்கரி உள்ளது. மேலும், தேவையான நிலக்கரி வந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஒரு கப்பலில் 55 ஆயிரம் டன் நிலக்கரி வந்து துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்த நிலக்கரியும் அனல் மின்நிலையத்துக்கு வரும்போது, 10 நாட்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மின்உற்பத்தி எந்திரங்களை இயக்க முடியும்’ என்றார்.
Related Tags :
Next Story