மே தின விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


மே தின விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
x
தினத்தந்தி 2 May 2022 12:30 AM IST (Updated: 2 May 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மே தின விழாவையொட்டி தர்மபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி சார்பில் மே தின விழா தர்மபுரியில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவண பாபு, நகரமைப்பு அலுவலர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் ரமண சரண் வரவேற்று பேசினார். விழாவில் நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் கலந்து கொண்டு தொழிலாளர்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் சிறப்பாக பணிபுரிந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாட்டான்மாது கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இதில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், நகராட்சி மேலாளர் விஜயா, வருவாய் ஆய்வாளர் மாதையன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு அலுவலர் சீனிவாசலு நன்றி கூறினார்.

Next Story