மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கரக ஊர்வலம்


மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கரக ஊர்வலம்
x
தினத்தந்தி 1 May 2022 11:38 PM IST (Updated: 1 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கரக ஊர்வலம் நடைபெற்றது.


மேல்மலையனூர், 

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான (சித்திரை) அமாவாசை விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. 

இதையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

 தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு அருகில் சிவபெருமான் இருப்பதுபோல் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேளதாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். 

  பின்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டப்பட்டது. இரவு 11 மணியளவில் பூசாரிகள் பம்பை, மேளம் முழங்க அக்னிக்குளத்துக்கு சென்றனர். அங்கு பலவித பூக்களால் பெரிய கரகம் (பூங்கரகம்) செய்தனர். பின்பு  துரை பூசாரி தலையில் கரகத்தை சுமந்து, ஊர்வலமாக வந்து, இன்று அதிகாலையில் கோவிலை வந்தடைந்தார்.


 விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story