நாமக்கல் அருகே 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல் அருகே 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல்:
நாமக்கல் அருகே 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்த குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கலப்பட டீசல் பறிமுதல்
நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் பகுதியில் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரி ஒன்று கேட்பாரற்று நிற்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியபிரபு, செல்வராஜ், தலைமை காவலர் கூத்தகவுண்டன் ஆகியோர் அங்கு சென்று கேட்பாரற்று நின்று கொண்டு இருந்த லாரியை சோதனை செய்தனர்.
வாலிபருக்கு வலைவீச்சு
இந்த சோதனையின் போது லாரியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கலப்பட டீசலுடன் லாரியை குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கலப்பட டீசல் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
லாரியில் பதிவு எண் அழிக்கப்பட்டு இருப்பதால், அது யாருக்கு சொந்தமானது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கில் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story