மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை தமிழக அரசு ஏற்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் முனுசாமி, பொருளாளர் சம்பத், மாவட்ட தலைவர் பரமசிவம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக மத்திய அரசின் சட்டங்களை அமல்படுத்துகிற மாநில தொழிலாளர் துறையை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான உடலுழைப்பு நல வாரியங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story