விளையாட்டு போட்டிகளில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வாணியம்பாடி
தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் சார்பில், தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாணவன் எஸ்.பி.இம்ரான் நீளம் தாண்டும் போட்டி மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மன்சூர் ஷாபாஸ் 2-ம் இடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் ஏ.எஸ்.முபாரக் அலி, முதலிடத்தையும் வட்டு எறிதல் போட்டியில் பி.பிரவீன்குமார் 2-வது இடத்தையும் விற்றனர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் செயலாளர் எல்.எம்.முனீர்அகமது, கல்லூரியின் முதல்வர் டாக்டர். முகமது இலியாஸ், உடற்கல்வி இயக்குனர் முகமது இஸ்மாயில் கான் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story