திருத்தணி முருகன் கோவிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி என்ற பெண், கடந்த 30 ஆண்டுகளாக அந்நாட்டு மக்களுக்கு தமிழ்மொழி பயிற்சியும், இந்து ஆன்மீகத்தின் தொண்மை குறித்தும், குறிப்பாக முருகப்பெருமான் மீது அபார நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார்.
அவரது குழுவினர் ஆன்மீக தேடல் என்ற பெயரில், தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், முருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜப்பான் நாட்டை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகருக்கு விரதமிருந்து, மாலை அணிந்துக்கொண்டு வந்து முருகப்பெருமானை பயபக்தியுடன் வழிப்பட்டனர். பின்னர் தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து, மலைக்கோவில் மாட வீதிகள் வழியாக உலாவந்து முருகப்பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story