நாமக்கல் மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது
நாமக்கல் மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 93,089 விவசாயிகள் பாரத பிரதமரின் கிசான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அவர்களில் இதுவரை விவசாய கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) பெறாத விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெறும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் மே மாதம் 1-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் விவசாய கடன் அட்டை பெறுவதற்கான படிவங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு தொடர்புடைய வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்பு வங்கிகள் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து விவசாய கடன் அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும். விவசாய கடன் அட்டை மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். எனவே பாரத பிரதமரின் கவுரவ நிதி உதவி பெறும் விவசாயிகள் இம்முகாமில் வழங்கப்படும் படிவத்தினை பூர்த்தி செய்து வழங்கிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story