மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி தெப்பத்திருவிழா


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பங்குனி தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 20 April 2022 4:48 PM GMT (Updated: 20 April 2022 4:48 PM GMT)

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி:
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி தெப்பத்திருவிழா நடந்தது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெப்ப திருவிழா 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான இக்கோவில் தென்னகத்து துவாரகை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது. 
சிறப்பு அலங்காரம் 
இதையொட்டி கோவிலின் அருகே உள்ள கிருஷ்ணதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ராஜகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமாவுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவியரசு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக கோவிலை சுற்றிலும் உள்ள 4 வீதிகளிலும் ராஜகோபாலசாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story