மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி மீனவர் சாவு


மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி மீனவர் சாவு
x
தினத்தந்தி 20 April 2022 2:05 PM IST (Updated: 20 April 2022 2:05 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது43). மீனவர்.

இவர் நேற்று காலை தனது தொழில் சம்பந்தமாக மீன் பிடிக்கும் வலைகள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கோவளம் சென்றுவிட்டு, மீண்டும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சூளேரிக்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்புறம் அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெகதீசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மீனவர் ஜெகதீசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள வாகனங்களின் விவரத்தை சேகரித்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story