மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு திணிப்பை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உசேன், கண்ணன் அந்தோணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story