கோவில்களில் சிறப்பு பூஜை
நீலகிரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டு
பிலவ ஆண்டு முடிவடைந்து சுபகிருது ஆண்டு இன்று பிறந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊட்டி மாரியம்மன் கோவிலில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சீனிவாச பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். எல்க்ஹில் முருகன் கோவில், லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், காந்தல் காசி விஸ்வநாதர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வெள்ளிக்கவசம்
கூடலூர் சக்தி விநாயகர், மேல் கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன், சக்தி முனீஸ்வரன் உள்பட அனைத்து கோவில்களிலும் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக தமிழ் புத்தாண்டையொட்டி வீடுகளில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story