கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில் தேரோட்டம்


கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 13 April 2022 4:52 PM (Updated: 13 April 2022 4:52 PM)
t-max-icont-min-icon

கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

சூளகிரி:
சூளகிரி அருகே கோபசந்திரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தட்சிண திருப்பதி என்று போற்றப்படும் இந்த கோவில் தேரோட்ட விழா நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகம், பூஜைகள், அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. இதில் சூளகிரி, ஓசூர், கோபசந்திரம், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநில்ங்களில் இருந்து கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story