கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனிதிருவிழா தேரோட்டம்


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனிதிருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 13 April 2022 8:13 PM IST (Updated: 13 April 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனிதிருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் திருவிழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 9-ம் நாள் திருவிழாவையொட்டி கம்மவார் சங்கம் சார்பில் 47-வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது.
 இதையொட்டி நேற்று காலை 6.35 மணி முதல் 7.25 மணி வரை ராதா ரோகணம் பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கம்மவார் திருமண மண்டபம் முன்பிருந்து தேர் வடம் பிடிக்க சமுதாய மக்கள், இளைஞர்கள் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்து, கோவிலில் தரிசனம் செய்து தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். 
திரளான பக்தர்கள்
தேரோட்ட விழாவிற்கு கம்மவார் சங்க தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் என்.ராதாகிருஷ்ணன், செயலாளர் எல்.ஆர்.ஜெனரேஸ், பொருளாளர் டி.வி.சிவகுமார், இணை செயலாளர் ஆர்.செல்வராஜ், மண்டல தலைவர் ஆர்.பொன்ராஜ், முன்னாள் தலைவர்கள் பி.ஆர்.எஸ்.சீனிவாசன், ஆர்.வி.எஸ்.துரைராஜ், ஜி.கனகராஜ், ரீஜென்ட் ஹரிபாலகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ, கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், பி.எஸ்.ஆர். கல்வி குழுமம் தாளாளர் பி.எஸ்.ஆர்.சோலைச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தில் விநாயகா ரமேஷ், ராமச்சந்திரன், சீனுசீனிவாசன், மாடர்ன் ரமேஷ்குமார், பாலமுருகன், கார்த்திக் காமராஜ், வேல்ராஜன், பட்டுராஜன், கோகிலா நாராயணசாமி, சத்யா திருமால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் சுவாமி தேரும், அடுத்து அம்மன் தேரும் நான்கு ரத வீதிகளில் வந்தன.
தெப்பத்திருவிழா
இரவு பி.ஆர்.எஸ்.சீனிவாசன் ஏற்பாட்டில் இன்னிசை நிகழ்ச்சி கம்மவார் சங்க தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் நடந்தது. 
இன்று 10-ம் நாள் திருவிழாவையொட்டி ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் வீதிஉலா புறப்பட்டு அடைக்கலம் காத்தான் மண்டபம் வருதல், இரவு 8.15 மணிக்கு சுவாமி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் 9 முறை உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
------------

Next Story